தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் வரலாற்றுச் சாதனை - என்.ஒய்.யு. லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையம்

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பொருத்தி சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.

http://10.10.50.90//APTN/20-October-2021/us_animal_to_human_organs_20211020i_2010a_1634748512_790.jpg
http://10.10.50.90//APTN/20-October-2021/us_animal_to_human_organs_20211020i_2010a_1634748512_790.jpg

By

Published : Oct 21, 2021, 10:33 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் என்.ஒய்.யு. லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மரபணு மாற்றப்பட்ட பன்றிகள், கால்சேஃப் என அழைக்கப்படுகிறது. இந்த மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பொருத்தி சோதனை மேற்கொண்டு அதில் மருத்துவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி உறுப்பு மாற்று சிகிச்சையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விலங்கின் உறுப்பை மாற்று அறுவைசிகிச்சைக்காக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மருத்துவ உலகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்துள்ளனர். இதில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்றுக்காக காத்துள்ளனர். ஒரு நபருக்கான சராசரியான காத்திருப்பு காலம் மூன்று முதல் ஐந்தாண்டு வரை தேவைப்படுகிறது.

இதையும் படிங்க:TOP 10 HIGHLIGHTS: 100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ் மைல்கல்

ABOUT THE AUTHOR

...view details