அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் இரு வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று அதிகாலை ( நவ.10 ) தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், காவல்துறை அலுவலர் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த காவல்துறை அலுவலர் ஜோ சீல்ஸ், பே வ்யூ கல்லறையில் குற்றவாளிகளைத் தடுக்க முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பயங்கரவாத செயல் இல்லை என்றும் நியூ ஜெர்சி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்விடத்தை சுற்றியுள்ள 12 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நியூ ஜெர்சியில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நியூ ஜெர்சி மேயர் ஸ்டீவன் ஃப்லாப் கூறுகையில், "பே வ்யூ கல்லறை, கோஷர் சந்தை என இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் காவல்துறை அலுவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
பாதுகாப்புப் பணியில் நியூ ஜெர்சி காவல் துறையினர் இதையும் படிங்க : மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு!