அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான U.S. Navy T-6B Texan II என்ற விமானம் அலபாமா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.
அலபாமாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. இதை அமெரிக்க கடற்படை உறுதி செய்துள்ளது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் பெயர்களை அமெரிக்க கடற்படை வெளியிடவில்லை.
இந்த விமான விபத்து காரணமாக அருகில் இருந்த வீட்டிலும் கார்களிலும் தீ பரவியுள்ளது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: இறுதிகட்ட பரப்புரையில் பிடனின் மகனை குறிவைத்துத் தாக்கிய ட்ரம்ப்