வாஷிங்டன்: கரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் அனைத்தும் தமது மக்களைத் தொற்றிலிருந்து காக்க தடுப்பு மருந்துகளை நாடியுள்ளன. ஆனால், சில நாடுகள் தங்களது பணபலத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதிகப்படியான தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்வதால் நடுத்தர, ஏழை நாடுகள் முதியவர்களுக்கும், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தட்டுப்பாடுகளைச் சந்தித்துவரும் நிலை உள்ளது என சூழலியல் இளம் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிக வருமானம் கொண்ட நாடுகளில் நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்களில் ஒருவருக்கே கிடைத்துள்ளது.