தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செவ்வாய் கிரகத்தில் கேட்கும் வினோத சத்தம் - அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா

செவ்வாய் கிரகத்தின் காற்று சத்தத்தை பதிவு செய்த விண்கலம் அதை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

Mars
Mars

By

Published : May 8, 2021, 12:29 PM IST

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. முதன்முறையாக வேற்றுகிரகத்தில் பறக்கும் விதமாக 2 கிலோ ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்து அதை விண்கலத்தில் வைத்து நாசா சார்பில் அனுப்பப்பட்டது.

இந்த விண்கலம் பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய நிலையில், கடந்த மாதம் 19 (ஏப்ரல் 19 )ஆம் தேதி விண்கலத்தில் இருந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் காற்று சத்தத்தை பதிவு செய்து நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

மெல்லிய குரலில் ஹம்மிங் செய்வது போன்ற இந்த சத்தத்தை நாசா விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த சத்தத்தைக் கொண்டு செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்றின் தன்மை, அதன் வேகம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கேட்கும் வினோத சத்தம்

முதற்கட்டமாக சத்தங்களை பதிவு செய்துள்ள இந்த ஹெலிகாப்டர் ஊர்தி, அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை ஆய்வு செய்து அங்கு உயிரினங்கள் வசிப்பதற்கான தடங்கள் தெரிகிறதா என சோதனை செய்ய உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கேட்கும் வினோத சத்தம்

ABOUT THE AUTHOR

...view details