உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த நாசா செவ்வாய் கிரகத்திற்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. பூமியிலிருந்து 48 கோடி கி.மீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்துள்ளனவா என்ற ஆய்வை மேற்கொள்ளவே இந்த புதிய விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ரோவருடன் தயார் செய்யப்பட்ட இந்த விண்கலத்தில் புகைப்படக் கருவி, மைக்ரோபோன், லேசர் கருவிகள் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர நாசா திட்டமிட்டுள்ளது.