தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2020, 1:19 AM IST

ETV Bharat / international

54 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட ராக்கெட் விண்வெளியில் கண்டுபிடிப்பு!

கேப் கார்னிவேல்: விண்வெளியில் கண்டெடுத்த மர்ம பொருளானது, 54 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட பழைய ராக்கெட் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ake
akef

கடந்த மாதம் ஹவாயில் கிரகத்தை டூம்ஸ்டே பாறைகளிலிருந்து பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வின்போது, அடையாளம் தெரியாத பொருள் பூமியின் சுற்றுப்பாதை நோக்கி வருவதை கண்டுபிடித்தனர். அந்த பொருள் சுமார் 26 அடி (8 மீட்டர்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பொருள் சுற்றுப்பாதை அமைப்பு மற்ற விண்கற்களை போல் இல்லாமல் வித்தியாசமாக காணப்பட்டதால் குழப்பமடைந்த விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விண்வெளியில் சுற்றும் அந்த மர்ம பொருளானது 54 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட ராக்கெட் என கண்டுபிடித்துள்ளனர். இந்த ராக்கெட் நிலவில் தரையிறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. இறுதியாக, தற்போது அந்த ராக்கெட் பூமிக்கு திரும்பி வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கிடைத்த தகவலின்படி, 1966ஆம் ஆண்டில் நாசா சென்டார் மேல் ராக்கெட்டில் சர்வேயர் 2 லேண்டரை நிலவிற்கு அனுப்பியுள்ளது. ஆனால், அதில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லேண்டர் நிலவில் தரையிறங்க முடியாமல் நேராக மோதி சிதறியுள்ளது. இதன் பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாக உலாவிக் கொண்டிருந்துள்ளது. தற்போது, 54 ஆண்டுகளுக்கு பின்பு மக்களின் கண்களில் சிக்குவது மிகவும் அபூர்வமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details