தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சூட்கேஸ் சைசில் சாட்டிலைட் : நாசாவின் அசத்தல் திட்டம் - நிலவை ஆராய் நாசா செயற்கைக்கோள்

வாஷிங்டன் : நிலவின் மேல் பரப்பில் உள்ள பனிக் கட்டிகளைக் கண்டறிய 'லூனார் ஃபிளாஷ்லைட்' என்ற மிகச்சிறிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

moon
moon

By

Published : Apr 29, 2020, 8:53 AM IST

இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அர்டிமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இயற்கையாகவே தோன்றும் பனிக் கட்டிகளைக் கண்டறிய 'லூனார் ஃபிளாஷ்லைட்' என்ற மிகச் சிறிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

சூட்கேஸ் அளவிலான இந்த செயற்கைக்கோள் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியே படாத நிலவின் பள்ளத்தாக்குகளின் அடியில் சென்று பனிக் கட்டிகளின் இருப்பை ஆராயும்.

குறைந்த பொருள்செலவில் தாயாரான லூனார் ஃபிளாஷ்லைட் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத இயற்கையான எரிபொருள்களால் செயல்படக் கூடியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'ஹைடிராக்ஸைன்' எரிபொருளை விட இது பாதுகாப்பானது" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து அதன் மேலாளர் ஜான் பேக்கர் கூறுகையில், "லூனார் ஃபிளாஷ்லைட் போன்ற தொழில்நுட்பச் சோதனை திட்டங்களுக்குக் குறைந்த அளவே செலவாகிறது. எனினும், நிலவு குறித்து நாசா தொடர்ந்து ஆராய்ச்சியை நடத்தவும், இனி வரும் காலங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைச் சோதனையிடவும் இது உதவும் என்றார்" என்றார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரேபிட் கிட்கள் தரமற்றதா? - சீனா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details