தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவின் மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் விசாரணை! - அமெரிக்காவிலுள்ள மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியிலுள்ள மேஃபேர் மாலில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் மேஃபேர் மாலில் துப்பாக்கிச் சூடு

By

Published : Nov 21, 2020, 10:54 AM IST

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியிலுள்ள மேஃபேர் மாலில் நேற்று (நவ.20) துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த பொதுமக்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவருக்கு 20 வயது முதல் 30 வயது இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனியில் இடத்தகராறில் துப்பாக்கிச் சூடு: முதியவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details