டெல்லி : கொலம்பியா நாட்டின் துணை அதிபரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான மார்டா லூசியா ராமிரெஸ் (Marta Lucia Ramirez), மீனாட்சி லேகி சந்திப்பு கொலம்பியாவில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினார்கள்.
இது தொடர்பாக மீனாட்சி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொலம்பியாவின் துணை அதிபரும் வெளியுறவு அமைச்சருமான மார்டா லூசியா ராமிரெஸுடன் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விண்வெளியில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திங்கள்கிழமை (செப்.6), கொலம்பியாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மீனாட்சி லேகி உரையாற்றினார். அப்போது கொலம்பியா அமைச்சர், அலுவலர்கள் இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.