உலகில் இணைய சேவை பயன்பாடு குறித்து 'கிபாய்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டில் மட்டும் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33 கோடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து உலகளவில் மொத்த பயன்பாட்டின் எண்ணிக்கை 470 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் 60 விழுக்காட்டு மக்கள் இணைய சேவையைப் பயன்படுத்திவருகின்றனர். மொத்த பயன்பாட்டில் சீனா முதலிடத்தில் உள்ளது.