அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரத்தை எதிர்கொள்ள பெரும் போராட்டமே நடந்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டொனல்ட்டு ட்ரம்ப் அண்மையில் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருமி நாசினிகள் கரோனா வைரஸை அழிக்கும் வல்லமை கொண்டுள்ளதால், அவற்றை நோய் பாதித்தவர்களின் உடலில் செலுத்தினால் என்ன என்ற ஆகச் சிறந்த சிந்தனையை ட்ரம்ப் சிதறவிட்டார்.
ட்ரம்பின் இந்த கருத்தை கேட்டு மிரண்டுபோன அமெரிக்க ஊடகங்கள் இதை உலகளவில் ட்ரென்டாக்கவே, நான் சும்மாச்சுக்கும் கிண்டலுக்கு சொன்னேன் அதப்போய் சீரியசா எடுத்துக்கிட்டீங்களா அப்படினு ஜகா வாங்கினார்.
ஆனால் ட்ரம்பின் காமெடியை புரிந்துகொள்ளாத நியூயார்க் நகரவாசிகள் 30 பேர் ட்ரம்பின் யோசனையை நேரடியாக பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். ட்ரம்ப் கருத்துகூறிய 18 மணிநேரத்தில், சுமார் 30 பேர் கிருமிநாசினிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தி கரோனாவை அழிக்கும் முயற்சியில் களமிறங்கியது வேதனைக்குரிய விவிகாரமாக மாறியுள்ளது.