நிலவு, செல்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, இந்த திட்டங்களுக்காக விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.
இதனையொட்டி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் எட்டு மாதங்கள் தனிமையிலிருந்து விண்வெளி பயிற்சி பெறுவதற்கு அமெரிக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என நாசா அறிவித்துள்ளது.
அந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உடல், மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எஸ், பிஹெச்டி பட்டம், அல்லது ராணுவப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கிலத்துடன், ரஷ்ய மொழியிலும் சரளமாகப் பேச வேண்டும்.
விண்வெளி வீரர்கள் தனிமையில் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகள் குறித்து இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?