தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் ட்ரம்பின் சர்ச்சை கருத்துகள்... வெல்லப்போவது யார்? - தேர்தல் பிராச்சாரங்களில் அரங்கேறிய அதிபர் ட்ரம்பின் சர்ச்சை கருத்துகள்

வாஷிங்டன்: தேர்தல் பரப்புரையில் அரங்கேறிய அதிபர் ட்ரம்பின் சர்ச்சை கருத்துகளை குறித்து அலசி பார்ப்போம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

By

Published : Nov 4, 2020, 12:55 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (நவம்பர் 3) நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. 270 நம்பரை பிடிக்கப்போவது யார் என உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.

இதற்கிடையில், தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் சர்ச்சையில் சிக்கிய சம்பவங்கள் குறித்து அலசி பார்ப்போம். கரோனா தொற்றிலிருந்து மீண்ட ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசுகையில், முன்பை விட பலம் பெற்றவராக உணர்கிறேன். அழகான பெண்கள் உட்பட அனைவரையும் முத்தமிடுவேன் எனத் தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல், கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் ட்ரம்ப் பங்கேற்றது மட்டுமின்றி, பங்கேற்பாளர்கள் மீதும் முகக்கவசங்களை தூக்கி வீசியது குறிப்பிடத்தக்கது.

அதே போல், ஆரம்பம் முதலே கரோனா வைரசுக்கு சீனா தான் காரணம் என ட்ரம்ப கூறி வந்தார். அந்த வகையில், கரோனா தொற்றிலிருந்து மீண்ட அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் மீண்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அதில், சீன வைரஸை, தான் முறியடித்துவிட்டதாகவும் தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்திருப்பதால் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். இந்த கருத்து மூலம் கரோனா தொற்றை சீனா தான் பரப்பியது என அதிபர் ட்ரம்ப கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், பல்வேறு இடங்களில் ட்ரம்ப் சர்ச்சை பேச்சுகள் மூலம் வசமாக சிக்கியுள்ளார். இத்தகைய சர்ச்சைகள் சிக்கிய அதிபர் ட்ரம்ப மீண்டும் அதிபராக வலம் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜொலிக்கும் தமிழர்!

ABOUT THE AUTHOR

...view details