தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஃபேஸ்புக்கில் மோடி தான் டாப், ட்ரம்புக்கு 2ஆம் இடம் - மோடி பேஸ்புக் முதலிடம்

நியூயார்க்: உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

மோடி
மோடி

By

Published : Apr 23, 2020, 6:10 PM IST

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் 2020ஆம் ஆண்டிற்கான உலகத் தலைவர் பட்டியலைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் உலகின் பிரபலமான தலைவர்களை அவர்களது ஃபேஸ்புக் பாலோயர்ஸ் மூலமாகப் பட்டியலிடுகிறது.

இந்தப்பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் மோடிக்கு சுமார் 4.5 கோடி பாலோயர்ஸ் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2.7 கோடி பாலோயர்ஸுடன் இரண்டாவது இடத்திலும், 1.68 கோடி பாலோயர்ஸுடன் ஜோர்டான் அரசி ரானியா மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கால கட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி மோடி முதலிடத்திற்கு வந்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தனது இந்தியப் பயணத்தின் போது, 'உலகின் இரு பிரபலத் தலைவர்கள் மேற்கொள்ளப்போகும் சந்திப்பு பிரமாண்டமானது, வரலாற்றுச்சிறப்புமிக்கது' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நியூயார்க்கில் புலி, சிங்கத்துக்கும் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details