இலங்கையில் இன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 207 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரையும், பிரதமரையும் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிறகு அவர் அளித்த இரங்கல் குறிப்பில், 'இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனம் நம் மதத்தில் இல்லை, இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயம் அடைந்த மக்கள் நலம்பெறப் பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
‘இலங்கை மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்’ - மோடி - இலங்கை குண்டுவெடிப்பு
டெல்லி: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
இதற்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 'இதுவரை தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்கா, இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளோம்' என்றார்.