உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
உலகளாவிய விநியோகத்திற்கு தயாராகும் மாடர்னா தடுப்பூசி! - கரோனா தடுப்பூசி விநியோகம்
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனமான மாடர்னா தனது கரோனா தடுப்பூசி மருந்தை உலகளாவிய விநியோகத்திற்கு தயார்படுத்திக் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கான உலகளாவிய பந்தயத்தில் முன்னணியில் இருப்பவர்களில் மாடர்னா இன்க் நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் கண்டுபிடித்த எம்.ஆர்.என்.ஏ-1273 தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்தப் பரிசோதனையில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதுமட்டுமின்றி கூடுதலாக 4 தடுப்பூசி மருந்துகளை இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.
இதுகுறித்து மாடர்னா தலைமை நிர்வாக அலுவலர் ஸ்டீபன் பான்செல் கூறுகையில், "எம்ஆர்என்ஏ -1273 தடுப்பூசியை அறிமுகப்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த மருந்து விநியோகம் தொடர்பாக உலகெங்கிலும் உள்ள பல அரசாங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். இந்த மருந்தை மேலும் முன்னேற்றுவதற்காக விஞ்ஞானிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விரைவில், இந்த மருந்தின் உலகளாவிய விநியோகம் இருக்கும்" எனத் தெரிவித்தார்