அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைச் சட்டம் சுமார் 16 மாகாணங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தனது தேர்தல் பரப்புரையின்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அதற்கான நடவடிக்கைகள் பல்வேறு மாகாணங்களில் மெள்ள மெள்ள மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சமீபத்தில் அலபாமா மாகாணம் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
கருக்கலைப்பு மையம் இல்லாத முதல் மாகாணம்! - us
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு மையம் இல்லாத முதல் மாகாணமாக மிசோரி உருவெடுக்க உள்ளது.
கருக்கலைப்பு மையம் இல்லாத முதல் மாகாணம்
இந்நிலையில், மிசோரி மாகாணத்தில் செயல்பட்டுவரும் கருக்கலைப்பு மையம் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிக்க அம்மாகாண சுகாதாரத் துறை மறுத்ததையடுத்து, இந்த வாரத்தில் அந்தக் கருக்கலைப்பு மையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள "பிளாண்ட் பாரன்ஹுட்" என்னும் லாப நோக்கமற்ற அமைப்பின் தலைமை செயல் அலுவலர், இந்த நடவடிக்கை எச்சரிக்கை இல்லை என்றும் பொதுமக்களின் நலம் சார்ந்த விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார்.