தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிகினியில் வழுக்கி விழுந்த பிரான்ஸ் அழகி; புன்னகையுடன் எழுந்து வீரநடை - வைரல் காணொலி! - Miss Universe 2019 Contestants Slip on Wet Stag

வாஷிங்டன்: நீச்சல் உடைப் போட்டியில் மேடையில் வழுக்கி விழுந்த போட்டியாளரின் காணொலி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

Miss Universe 2019
பிரபஞ்ச அழகி

By

Published : Dec 9, 2019, 9:24 PM IST

அமெரிக்காவில் அட்லாண்டா பகுதியில் பிரபஞ்ச் அழகி 2019 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல நாட்டு அழகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், நீச்சல் உடையில் நடந்து வரும் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, பல நாட்டு அழகிகள் தங்களுக்கென்று தனிபாணியில் நடந்து அசத்தினர்.

அப்போது, பிரான்ஸ் அழகி மேவா கூக்கே மேடையில் ஈரப்பதம் அதிகமிருந்த காரணத்தினால், திடீரென்று வழுக்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், மேவா பதறாமல் பொறுமையாக எழுந்து, புன்னகையுடன் மீண்டும் வீரநடைப் போட்டார்.

இதைப் பார்த்த பொது மக்கள், கைகளை தட்டி அவரை உற்சாகப் படுத்தினர். மேலும் பல அழகிகள் மேடையில் வழுக்கி விழுவது போல் தடுமாறியதால், போட்டி உடனடியாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, தரையில் இருந்த ஈரப்பதம் சரிசெய்யப்பட்டது.

இந்த காணொலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மேவா கூக்கே, ' நேற்று மேடையில் தவறி விழுந்ததைப் போல், எனது வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது இல்லை. ஆனால், சில கசப்பான சம்பவங்களும் பல ஆச்சரியங்கள் நமக்குத் தரும். ஒரு பெண் விழுந்தாலும் உடனடியாக எழுந்து நிற்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் சாராம்சம் இது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என்றார்.

தற்போது, பிரபஞ்ச அழகி 2019 போட்டியின் வெற்றியாளராக, தென் ஆப்பிரிக்க அழகி சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்க அழகி!

ABOUT THE AUTHOR

...view details