அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் 2019ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. நீச்சலுடை சுற்று, சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்த அறிவு என பல சுற்றுகள் நடத்தப்பட்டது. இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பியூர்டோ ரிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் களத்திலிருந்தனர்.
இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அழகி சொசிபினி துன்சி பேசுகையில், "என்னைப் போன்ற நிறமும் கூந்தலுமுடைய பெண்கள் எல்லாம் அழகற்றவர்களாகக் கருதப்படும் இடத்திலிருந்து வந்தவள் நான். என்னை நான் அழகானவளாக ஒருபோதும் கருதியதில்லை. ஆனால் இந்த சிந்தனையெல்லாம் இத்துடன் முடியும் என்று நினைக்கிறேன்" என்றார்.