தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

செய்தியாளரின் பின்புறத்தில் தட்டிய அமைச்சர்... அதிர்ச்சியில் மக்கள்!

வாஷிங்டன்: நேரலையில் மாரத்தான் போட்டி குறித்து தொகுத்து வழங்கிய செய்தியாளரின் பின்புறத்தில் தட்டிய போட்டியாளருக்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lvie
நேரலை

By

Published : Dec 14, 2019, 7:14 PM IST

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை, அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் நேரலையில் அப்போட்டியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மாரத்தானில் ஓடி வந்த போட்டியாளர்கள், கேமராவில் கைகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிகாட்டிக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு போட்டியாளர் நேரலையிலிருந்த செய்தியாளரின் பின்புறத்தில் தட்டிவிட்டு ஓடிவிட்டார். இதை எதிர்பார்க்காத செய்தியாளர், சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த காணொலியை அந்த செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்ததைத் தொடர்ந்து இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்டது.

மேலும், அந்த போட்டியாளரின் விவரங்களை இணையவாசிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், செய்தியாளரின் பின்புறத்தில் தட்டியது, 43 வயதான ஜார்ஜியாவின் ’இளைஞர் நலத்துறை’ அமைச்சர் டாமி கால்வே என தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் டாமி கால்வே கூறுகையில், "நான் முதுகில்தான் தட்ட நினைத்தேன். ஆனால், தவறுதலாக கை எங்கு பட்டது என்று எனக்கு தெரியவில்லை. தவறான நோக்கத்துடன் நான் செய்யவில்லை. அந்த செய்தியாளர் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்..

இதையும் படிங்க: நாடாளுமன்றம் செல்கிறது ட்ரம்ப் பதவி நீக்க தீர்மானம் !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details