தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவால் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதில் தாமதம்!

நியூயார்க்: கரோனா வைரசால் தட்டம்மைக்கான தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், உலகம் முழுவதும் 117 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

By

Published : Apr 15, 2020, 2:27 PM IST

millions-of-children-at-risk-of-measles-as-vaccines-face-covid-19-threat
millions-of-children-at-risk-of-measles-as-vaccines-face-covid-19-threat

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து விடுத்துள்ள அறிக்கையில், ''உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே குழந்தைகளுக்கு போடப்படும் உயிர்காக்கும் தட்டம்மை தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை போடுவதை 24 நாடுகள் ஒத்தி வைத்துள்ளன. இதனால் 37 நாடுகளில் 118 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கரோனா வைரஸ் காரணத்தால் தடுப்பூசி போடுவதில் தாமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றாலும், அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை செயல்படுத்த வேண்டும்.

கரோனாவால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்றாலும், தடுப்பூசி போடாததால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது. இதற்காக சில வழிமுறைகளை வகுத்துள்ளோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இனி நிதி கிடையாது; உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் செக்

ABOUT THE AUTHOR

...view details