அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மிட்சல் ஒபாமா மன அழுத்ததில் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மன அழுத்ததில் உள்ளேன்' - மிட்சல் ஒபாமா! - அமெரிக்கா முன்னாள் அதிபர்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்சல் ஒபாமா மன அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
bama
இது குறித்து அவர் கூறுகையில் "கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள், அமெரிக்காவில் உள்ள இனவெறி பிரச்னை, அதிபர் ட்ரம்பின் ஒழுங்கற்ற ஆட்சி முறை தான் என மன அழுத்ததிற்கு காரணம்.
என் தூக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென்று நடு ராத்தியில் தூக்கம் கலைந்து விடுகிறது. நான் பலவற்றை குறித்து கவலைப்படுவது தான் காரணம்" எனத் தெரிவித்தார்