தமிழ்நாடு

tamil nadu

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் லேட் எண்ட்ரி கொடுக்கும் ப்ளூம்பர்க்

By

Published : Nov 25, 2019, 11:10 AM IST

வாஷிங்டன் : 2020 அமெரிக்க தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

bloombsberg

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், மூத்த அரசியல்வாதியான பெர்னி சான்டர்ஸ், செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் துளசி கபார்ட் என ஏராளமானோர் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பல மாதங்களுக்கு முன்பே தங்களது தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் நியூயார்க் நகர மேயரும், ப்ளூம்பர்க் பத்திரிகை இணை நிறுவனரும், தொழிலதிபருமான மைக்கேல் ப்ளூம்பர்க் போட்டியிடவுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2001ஆம் ஆண்டு குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு நியூயார் நகர மேயரான ப்ளூம்பர்க், பிறகு வேறு கட்சிகளுக்குத் தாவி, சுயட்சையானார். இதையடுத்து, 2018ல் ப்ளூம்பர்க் ஜனநாயக் கட்சியில் மீண்டும் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'டைகர் ட்ரம்ப்': சீனாவின் வெறுப்பும் இந்தியாவின் வளர்ச்சியும்..!

ABOUT THE AUTHOR

...view details