மெக்ஸிக்கோவில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சாலையில் நடனம் ஆடி மக்களை குஷிப்படுத்தும் தெரு கலைஞர்களால் ஒரு மாதத்திற்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இதனால், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான கலைஞர்கள் அனைவரும், மெக்ஸிகன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சூப்பர் ஹீரோக்கள், கோமாளிகளாக உடையணிந்து தேசிய அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சூப்பர் மேன் வேடமணிந்த நபர் கூறுகையில், "நிகழ்ச்சி இல்லாததால் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவில் தெரு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது நிதி உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை முன்வைத்தனர்.