தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மெக்சிகோ அதிபருக்கு கரோனா - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

மெக்சிகோவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அந்நாட்டு அதிபருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Andres Manuel Lopez
Andres Manuel Lopez

By

Published : Jan 25, 2021, 2:38 PM IST

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அங்கு நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின்றன.

அந்நாட்டில் இதுவரை 17 லட்சத்து 63 ஆயிரத்து 219 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 614 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மேனுவேல் லோபேசுக்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு மிதமான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் பேசவுள்ளேன். அவருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி அனுப்ப வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:லடாக் விவகாரம் - சீனாவுடன் 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details