தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'6 அடி உயரம் கம்பீரத் தோற்றம்' - தோப்பில் சிக்கிய பெண் சிலையில் நீடிக்கும் மர்மம்! - சிட்ரஸ் தோப்பில் குழி

மெக்ஸிகோ: சிட்ரஸ் தோப்பில் குழி தோண்டிய விவசாயிகளுக்கு, ஆறு அடி உயரத்தில் கம்பீரத் தோற்றம் கொண்ட பெண் சிலை கிடைத்துள்ளது.

மெக்ஸிகோ
மெக்ஸிகோ

By

Published : Jan 9, 2021, 4:32 PM IST

மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரைக்கு அருகே வசிக்கும் விவசாயிகள் சிலர், சிட்ரஸ் தோப்பில் குழி தோண்டுகையில் ஆறு அடி உயரத்தில் பெண் சிலை ஒன்றை கண்டுபிடித்தனர். இது தெய்வ சிலையைக் காட்டிலும் ஒரு உயரடுக்கு கொண்டு பெண்ணின் சிலையாக இருக்கலாம் அல்லது இருவரின் கலவையாகவும் இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கிடைத்த தகவலின்படி, சிலை வடிவத்தைப் பார்த்தவரை உயரடுக்கு பெண்போல் தோற்றம் அளிக்கிறது. இது 1450 முதல் 1521 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தச் சிலையை புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் கண்டுபிடித்ததும் உடனடியாக அரசு அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர். இந்தச் சிலை கிடைத்த இடம் தொல்பொருள் தளமாக கருதப்படாததால், பழங்காலத்தில் சிலை நகர்த்திவைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

தோப்பில் சிக்கிய பெண் சிலை

அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண் தோற்றம்கொண்ட சிலை, யாரை சித்திரிக்கிறது என்பது தெரியவில்லை. சிலையில் உள்ள பெண்ணின் உருவத் தோரணையை பார்க்கையில் அது தெய்வ சிலையைக் காட்டிலும் அந்தக் காலத்தை ஆட்சி செய்தவராக இருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details