தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்ப்பின் அடுத்த செய்தித் தொடர்பாளர் யார் தெரியுமா ? - ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

stephanie grisham

By

Published : Jun 26, 2019, 8:21 PM IST

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளாக இருந்த சாரா சென்டர்ஸ் இம்மாதம் இறுதியில் அப்பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளராக ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுயுள்ளதாவது:

வெள்ளை மாளிகையின் அடுத்த செய்தித்தொடர்பாளராக ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 2015ஆம் ஆண்டுமுதல் எங்களுடன் பணியாற்றிவரும் இவர்தான் இந்த பதவிக்கு சிறந்தவர்.

யார் இந்த ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம் ?

அதிபர் ட்ரம்ப்பின் 2016 தேர்தல் பரப்புரையை அலுவலர்களுள் ஒருவர் தான் ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம். ட்ரம்ப்பின் நம்பகத்தன்மையான ஆட்களுள் ஒருவரான கிறிஸ்ஹாம், அதற்கு முன்பாக, அரிசோனாமாகாணத்தில் குடியரசுக் கட்சியின் செய்தித் தொடபாளராகவும், ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.

42 வயதான கிறிஸ்ஹாம் பல்வேறு தருணங்களில் அதிபர் ட்ரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புக்கும் ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details