பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் (Biarritz) நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றார். ஜி7 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்ற போதிலும் இதில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது.
இதில் இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் மிக நெருக்கமான உலகப் புகழ்பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயும் கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் ஜஸ்டினுக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகை படத்தில் டொனால்ட் டிரம்ப் முகம்சுழிக்கும் வகையில் நின்றுகொண்டிருப்பதால் நெட்டிசன்கள் மீம்ஸ், நகைச்சுவையுடன் கேலி செய்து வருகின்றனர்.