நாசாவின் புகழ்பெற்ற கணிதவியலாளர்களுள் ஒருவரான கேத்தரின் ஜான்சன் தனது 101ஆவது வயதில் காலமானார். கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான ’ஹிட்டன் ஃபிகர்ஸ்’ இவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கறுப்பின விண்வெளி வீராங்கனைகளுக்கு இன்றளவும் முன்னோடியாக விளங்கும் கேத்தரினுக்கு அமெரிக்க விண்வெளி மையமான நாசா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நாசாவின் இணையப் பக்கத்தில், ”தனது 101ஆவது வயதில் எங்களது நாசா குடும்பத்தைச் சேர்ந்த கேத்தரின் உயிரிழந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேத்தரின் என்றுமே அமெரிக்காவின் நம்பிக்கை நாயகியாக இருந்து வந்துள்ளார். பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக விளங்கி அவர் விட்டுச் சென்றுள்ள மரபு காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும்” என்று பகிரப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவிடமிருந்து, சுதந்திரத்திற்கான பதக்கம் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதையும் இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரச குடும்ப பட்டம் இழப்பு குறித்து ஹாரி-மேகன் அறிக்கை