அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. அவரது பண்ணையில் உள்ள குளத்தில் சவாரி செய்யும் விதமாக பூசணிக்காயில் ஒருவர் உட்காரும் வகையில் இருக்கையை அமைத்தார். பின்பு தண்ணீருக்குள் பூசணிக்காவை இறக்கிய ஜஸ்டின் அதில் அமர்ந்துகொண்டு துடுப்பின் உதவியோடு படகு சவாரி செய்துள்ளார். இதனை ஜஸ்டின் மனைவி கிறிஸ்டின் ஓன்பி (Christin Ownby) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.