தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெள்ளை மாளிகை குழுவில் 61% பெண் ஊழியர்கள்! - ஜோ பிடன்

வெள்ளை மாளிகைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் கிட்டத்தட்ட 61 விழுக்காடு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

Biden's White House appointee
Biden's White House appointee

By

Published : Dec 31, 2020, 11:45 AM IST

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காடு பெண்கள், 54 விழுக்காடு பேர் கறுப்பின மக்கள் இடம்பெற்றுள்ளனர் என்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், அவருடன் சென்னையை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் ஜனவரி 20ஆம் தேதி, முறைப்படி பதவியேற்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடன் பணியாற்றப்போகும் பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் அறிவித்துவருகிறார்.

அந்த வகையில், பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுடன் இணைந்து வெள்ளை மாளிகை நிர்வாகக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

அதில், வெள்ளை மாளிகைக் குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காடு பெண்கள், 54 விழுக்காடு பேர் கறுப்பின மக்கள் இடம்பெற்றுள்ளனர் என்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் குழு தெரிவித்துள்ளது.

ஜோ பைடன்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், "ஆரம்பத்தில் இருந்தே, துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரிஸும் நானும் அமெரிக்காவைப் போலவே ஒரு நல்ல நிர்வாகத்தை உருவாக்க முற்பட்டோம்.

ஒரு மாறுபட்ட அணியை உருவாக்குவது நமது தேசம் எதிர்கொள்ளும் அவசர நெருக்கடிகளை நிவர்த்தி செய்து சிறந்த தீர்வுகாண வழிவகுக்கும். வெள்ளை மாளிகை குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் நாட்டை மீண்டும் சிறப்பாக, அவர்களின் நிபுணத்துவம், வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

இது குறித்து அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ் கூறியதாவது, "இந்தக் குறிப்பிடத்தக்க பொது ஊழியர்களுக்கு முதல் நாளிலிருந்தே அனைத்து நிர்வாக பணிகளையும் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான திறமையும், நிபுணத்துவமும் உள்ளது.

மேலும் இந்த வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு நமது பொருளாதாரத்தையும் நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இத மட்டும் பண்ணலனா அவ்ளோ தான் ; ட்ரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பைடன்!

ABOUT THE AUTHOR

...view details