வெனிசுவேலாவில் அதிபர் மதுரோவின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இதனால் அந்நாட்டில் கடுமையான உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது.
ஜூவான் குவைடோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட பிறகு பிற நாடுகளுக்கு சென்று அதிபர் மதுரோவின் அரசுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இதுவரை ஐம்பது நாடுகளுக்கு மேல் ஜூவான் குவைடோவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளன.
‘யார் இடத்துக்குள்ள யாரு நுழையுறது!’ - மிரட்டும் வெனிசுலா அதிபர் மதுரோ - அதிபர் மதுரோ
கரகஸ்: வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடோவுக்கு 15 வருடங்கள் எந்த அரசு பதவியும் வகிக்கக்கூடாது என்ற தடையை விதித்துள்ளது அதிபர் மதுரோவிவன் நிர்வாகம்.
வெனிசுலா நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஜூவான் குவைடோ
இந்நிலையில், ஜூவான் குவைடோவுக்கு எந்த ஒரு அரசு பதவியும் வகிக்க அடுத்த 15 வருடங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெனிசுவேலா அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, குவைடோ அந்நாட்டு மக்களை அதிபர் மதுரோவுக்கு எதிராக அணி திரளும்படி கோரிக்கை விடுத்துவருகிறார்.