தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கோவிட்-19 : கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளைக் காப்பாற்ற இசிஎம்ஓ கருவி உதவும் - கேவிட்-19 நோயாளிகள் இசிஎம்ஓ

வாஷிங்டன்: ரத்த செல்களுக்கு நேரடியாக ஆக்சிஜன் செலுத்தும் இசிஎம்ஓ கருவி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளைக் காப்பாற்ற உதவும் என வெஸ்ட் வெர்ஜினியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

covid 19
covid 19

By

Published : May 21, 2020, 11:04 AM IST

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாகும் நோயாளிகளுக்கு, நுரையீரல் செயலிழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நுரையீரல் செயலிழந்தால் அவர்களின் மூளை, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது குறைந்துவிடும்.

ஆகையால், இதுபோன்ற நோயாளிக்கு நரம்பு வழியாக ரத்த செல்களுக்கு நேரடியாக ஆக்சிஜன் செலுத்தும் இசிஎம்ஓ கருவிகளை பயன்படுத்தினால் அவர்களைப் பிழைக்கவைக்க முடியும் என வெஸ்ட் வெர்ஜினியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்போது கவலைக்கிடமாக இருந்த 32 கோவிட்-19 நோயாளிகளுக்கு இசிஎம்ஓ கருவி மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்காணித்துவந்தனர். இதில், 22 நோயாளிகள் உயிர்ப்பிழைத்துக் கொண்டதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தவிட்டதாகவும் ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

covid 19

இதுகுறித்து ஆய்வுக் குழுவில் ஒருவான ஜெரிமியா ஹயங்கா கூறுகையில், "நுரையீரல் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு இசிஎம்ஓ பயன்படுத்தினால் அவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், நுரையீரலோடு சேர்ந்து இதயத்திலும் பிரச்னையில் இருந்தால் அல்லது 70 வயதுக்கு மேற்பட்டோர் உயிர் பிழைப்பது கடினம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை

ABOUT THE AUTHOR

...view details