கரோனா வைரஸ் பெருந்தொற்று பற்றி தினசரி புதுப்புது தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகின.
அதாவது வெப்ப நிலை அதிகம் இல்லாமல் இருக்கும் இடத்தில் கரோனா வேகமாக பரவும் என்றும் வெப்பநிலை அதிகம் இருக்கும் இடத்தில் கரோனா தாக்கம் குறைவாக இருக்கும் என்பது தான் அது.
ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என பல செய்திகள் வந்தன. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ப்ரின்ஸ்ட்டன் என்விரான்மென்டல் இன்ஸ்டிடியூட் இது சம்பந்தமான ஆராய்ச்சியில் இறங்கியது.
ஆராய்ச்சியின் முடிவில் கரோனா பரவலுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே இந்த வைரஸ் பரவும் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு தொழிற்சாலையில் வெளியேறிய வெள்ளைப்புகை