கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகள் திணறி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருந்தாலும் கரோனா களப்பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகவியலாளர் ஆகியோர் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் கிறிஸ்டன் வெல்கர் (Kristen Welker), வானிலை மோசமாக காணப்பட்டாலும் நேரலையில் ரிப்போர்ட்டிங் செய்து வந்தார். அப்போது, திடீரென்ற அடித்த பலமான காற்றில், இரண்டு லைட் அடுத்தடுத்து சாய்ந்து அவர் முன்பு கீழே விழுந்தது. ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் அச்சமின்றி தொடர்ந்து, நேரலையில் பேசி வந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.