கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மறுபுறம், கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தாலும் அடுத்தாண்டு இறுதியில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "2021ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் மக்கள் தொகையில் கணிசமானோருக்கு தடுப்பு மருந்தை வழங்கிவிட்டோம் என்றால் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இல்லையென்றாலும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.