தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பேச்ச குறைச்சுட்டு வேலைய பாருங்க; நியூயார்க் ஆளுநருக்கு ட்ரம்ப் பதிலடி

வாஷிங்டன்: தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்துவிட்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள் என நியூயார்க் ஆளுநருக்கு அதிபர் ட்ரம்ப் பதில் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Apr 18, 2020, 2:04 PM IST

கரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 7.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பாதிப்பானது அந்நாட்டின் முன்னணி நகரமான நியூயார்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. அந்நகரில் மட்டும் கரோனாவால் 2.33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க் நகரம் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உபகரணங்கள் பற்றாக்குறையில் உள்ளதாக நகர ஆளுநர் ஆன்ட்ரூ கும்கோ தொடர்ச்சியாக குற்றம்சாட்டியுள்ளார். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை மைய அரசு தர வேண்டும் என்றும் தொடர் கோரிக்கை வைத்துள்ளார்.

கும்கோவின் தொடர் குற்றச்சாட்டு அந்நாட்டில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் அதற்கு பதிலடி தந்துள்ளார். தங்கள் சார்பில் அனைத்து உதவிகளையும் சரியான நேரத்தில் அனுப்பி வைத்துள்ளோம் எனவும் பேச்சில் மட்டும் கவனம் செலுத்தும் ஆளுநர் கும்கோ செயலில் கவனம் செலுத்த வேண்டும் என்று சாடினார்.

வரும் நவம்பர் மாதம் தேர்தலைச் சந்திக்கவுள்ள ட்ரம்பிற்கு எதிர்பாராத சவாலாக தற்போது கரோனா உருவெடுத்துள்ளது.

இதையும் படிங்க:ஆப்ரிக்காவில் கரோனா எண்ணிக்கை அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு அச்சம்

ABOUT THE AUTHOR

...view details