டைட்டானிக் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் லியோனார்டோ டிகாப்ரியோ. ஹாலிவுட் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். டைட்டானிக், தி ரெவனண்ட், உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். டிகாப்ரியோ பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சம் குறித்து பிபிசி இணையதளத்தில் வெளியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாத பிரச்னையை மழை பெய்தால் மட்டுமே தீர்க்க முடியும். 'தண்ணீர் இல்லாத நகரில் முழுமையாக வற்றிப்போன கிணறு' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியைத்தான் அவர் பகிர்ந்துள்ளார்.