பிரபல ஹாலிவுட் நடிகரான லியர்னார்டோ டி கேப்ரியோ, ரஷ்யாவின் போர் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைன் நாட்டிற்கு பத்து மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 77 கோடி ரூபாய்க்கு மேலாகும். டி கேப்ரியோவின் இந்த முடிவுக்கு மனிதநேயத்தை தாண்டி தனிப்பட்ட காரணங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டி கேப்ரியோவின் தாய் வழி பாட்டி ஹெலின் இன்டென்பிர்கென் உக்ரைனில் உள்ள ஒடேஸா என்ற பகுதியில்தான் பிறந்துள்ளார். பின்னர் இவர்கள் குடும்பம் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், அங்குதான் டி கேப்ரியோவின் தாய் பிறந்துள்ளார். எனவே, தனது தாயுடைய தாயார் பிறந்த நாடு போர் பாதிப்புக்குள்ள நிலையில், அந்நாட்டிற்கு மனிதநேய பண்புடன் உதவிக்கரம் நீட்டியுள்ளார் டி கேப்ரியோ.