ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆண்டனியோ குட்ரரோஸ் உலக நாடுகளின் கரோனா தடுப்பு செயல்பாடு குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.
அதில், ஆப்ரிக்கா நாடுகள் கரோனாவை எதிர்கொண்ட விதத்தை வெகுவாகப் பாரட்டினார். வளர்ந்த நாடுகளே பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், ஆப்ரிக்கா இந்த கரோனா பரவல் தடுப்பை சிறப்பாக கையாண்டது எனவும் பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகள் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். கரோனா தடுப்பு நடவடிக்கையில் வளர்ந்த நாடுகள் ஆப்ரிக்காவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.