தென் அமெரிக்காவுக்கு அருகே உள்ள பனாமா நாட்டில் நேற்று (ஞாயிற்றுகிழமை) தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான ஜனநாயக புரட்சிகர கட்சியின் அதிபர் வேட்பாளர் லாரண்டினோ கார்டிசோ ( Laurentino Cortizo) 33 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
பனாமா அதிபர் தேர்தல் - லாரண்டினோ வெற்றி! - 2019
பனாமா சிட்டி: பனாமா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லாரண்டினோ கார்டிசோ வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லாரண்டினோ கார்டிசோ
இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபரும் வலது சாரி ஜனநாயக மாற்று கட்சியின் வேட்பாளருமான ரிகார்டோ மார்டினல்லி 31 விழுக்காடு வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் 1.93 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் லாரண்டினோ கார்டிசோ வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.