ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவருபவர் கிறிஸ்டின் ஃபேர். கருத்தரங்கம் ஒன்றில் பேசிய இவர், "சொல்லப்போனால் பாகிஸ்தான் ராணுவம்தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. அதனால்தான் அவர்களைக்(லஷ்கர்-இ-தொய்பா) கட்டுப்படுத்துவதில் பெரும் சாவல் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு மிகச் சிறந்த பிரதிநிதியாகவே லஷ்கர்-இ-தொய்பா செயல்படுகிறது" என்று அவர் கூறினார்.