தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிலநடுக்கத்தால் ஊஞ்சல் போன்று அசைந்த ரோலர் கோஸ்டர்! - swaying

வாஷிங்டன்: லாஸ் வேகாஸ் நகரில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதால், ரோலர் கோஸ்டர் ஒன்று லேசாக ஊஞ்சல் போன்று அசைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

நிலநடுக்கத்தால் ஊஞ்சல் போன்று அசைந்த ரோலர் கோஸ்டர்

By

Published : Jul 6, 2019, 7:07 PM IST

உலகின் புகழ்பெற்ற நகரமான லாஸ் வேகாஸ் அமெரிக்காவின் நிவேடா மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு, அதிகவிளான மக்கள் வருகை தந்து பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியில் மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் லாஸ் வேகாஸ் நகரிலும் உணரப்பட்டது. அப்பொழுது, அங்குப் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் செயல்பட்டு வந்த ரோலர் கோஸ்டர் லேசாக ஊஞ்சல் போன்று அசைந்தது.

ஊஞ்சல் போன்று அசைந்த ரோலர் கோஸ்டர்

இந்த நிலநடுக்கம் உணரப்பட்டபோது, ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details