தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்தது ஏன்? - நாகசாகி

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியை சில நாடுகள் வெற்றி தினமாக அனுசரிக்கின்றன. எனினும் சில நாடுகள் ஜப்பான் மன்னர் சரணடைந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியை வெற்றி தினமாக கொண்டாடுகின்றன. இதனை அவர்கள் வி-ஜே என்கிறார்.

World War II surrender  World War II  Japan's World War II surrender  Japan's emperor  Victory over Japan Day  Japanese Gen. Tomoyuki Yamashita
World War II surrender World War II Japan's World War II surrender Japan's emperor Victory over Japan Day Japanese Gen. Tomoyuki Yamashita

By

Published : Sep 2, 2020, 11:07 PM IST

டோக்கியோ:இரண்டாம் உலகப் போர் 75 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இத்தினத்தை அனைத்து நாடுகளும் ஒரே நாளில் நினைவுகூரவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியை சில நாடுகளும், ஜப்பான் மன்னர் அமெரிக்காவிடம் சரணடைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செப்டம்ர் 2ஆம் தேதியை சில நாடுகளும் வெற்றி தினமாக அனுசரிக்கின்றனர்.

அது என்ன வி-ஜே தினம்?

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வென்று விட்டோம் என்பதை காட்டுவதற்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வி-ஜே (ஜப்பானை வென்றுவிட்டோம்) தினமாக கொண்டாடுகின்றனர்.

ஆனால் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் கொரிய நாடுகள் உள்ளிட்டவைகள் ஜப்பான் சரணடைந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியை வெற்றி தினமாக கூறுகின்றன.

போர் வீரர்கள்

இருப்பினும் பிலிப்பைன்ஸ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் செப்டம்பர் 3ஆம் தேதியை வெற்றி தினமாக நினைவு கூருகின்றன. ஆனால் ஜப்பான் ஆகஸ்ட் 15ஆம் தேதியை துக்க தினமாக அனுசரிக்கின்றது. அன்றைய தினம், இரண்டாம் உலகப் போரில் மரணித்த வீரர்களுக்கு மன்னர் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

வெவ்வேறு தேதிகள் ஏன் உள்ளன?

ஆசியாவில் கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற போர் ஆகஸ்ட் 15ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆம்.. அன்றைய தினம் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது.

எனினும் அதிகாரப்பூர்வமாக அந்நாடு செப்டம்பர் 2ஆம் தேதிதான் இது தொடர்பாக கையெழுத்திட்டது. இதனை ஜப்பானை வென்ற தினம் (வி-ஜே தினம்) என அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் கூறினார்.

மேலும், அரசியல் மற்றும் வரலாற்று காரணங்களுக்காகவும் நாடுகள் வெவ்வேறு தேதியை கொண்டாடுகின்றன. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்களின் போரை கொண்டாடும் விதமாக சீனா செப்டம்பர் 3ஆம் தேதியை வெற்றி தினமாக 2014இல் அறிவித்தது.

அன்றைய தினம் சீனாவில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பும் நடக்கும்.

இரண்டாம் உலகப் போரின் போது, 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜப்பான் ராணுவ ஜெனரல் டொமொயுகி யமாஷிதா பிலிப்பைன்ஸில் சரணடைந்தார்.

ஆகவே பிலிப்பைன்ஸூம் செப்டம்பர் 3ஆம் தேதியை வெற்றி தினமாக அனுசரிக்கிறது. இதே தினத்தை பிலிப்பைன்ஸ் நாடும் வெற்றி தினமாக அனுசரிக்கிறது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி ஜப்பானுக்கு எதிராக போரை அறிவித்த ரஷ்யா, செப்டம்பர் தொடக்கத்தில் ஜப்பானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையும் எடுத்தது.

ஆகஸ்ட் 15, 1945 இல் என்ன நடந்தது?

ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடந்த கடும் யுத்தத்துக்கு மத்தியில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெரிக்கா அணு குண்டை வீசியது.

தொடர்ச்சியாக நாகசாகி நகர் மீது ஆக.9ஆம் தேதி அணு குண்டு வீசப்பட்டது.

இதற்கு பிறகு அமெரிக்காவிடம் சரணடைவதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி மதியம் ஜப்பான் ஒப்புக்கொண்டது. ஜப்பான் அமைச்சர்கள் சரணடைதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்து

இந்நிலையில் நாட்டு மக்களிடம் வானொலியில் ஜப்பான் மன்னர் பேசினார். இந்த வானொலி அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியை பதிவு செய்யப்பட்டது. இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அந்த ஆடியோ பதிவில் மன்னர் நா தழு தழுத்த குரலில் பேசியிருந்தார். மேலும் ஆடியோ பதிவில் மன்னரின் குரலும் சப்தமாக இல்லை. இதனால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

செப்டம்பர் 2, 1945 இல் என்ன நடந்தது?

டோக்கியோ விரிகுடாவில் யுஎஸ்எஸ் மிசொரி (USS Missouri ) என்ற போர்க்கப்பலில் ஜப்பானின் சரணடைதலுக்கான முறையான கையொப்பம் நடைபெற்றது.

அதில் 1854 கடற்படை கமாண்டர் மத்தேயு பெர்ரி அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதற்காக திறக்க ஜப்பானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

யுஎஸ்எஸ் மிசோரிக்குள், ஜப்பானிய வெளியுறவு மந்திரி மாமோரு ஷிகெமிட்சு மற்றும் ஜெனரல் யோஷிஜிரோ உமேசு சரணடைதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் இருவருக்கும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக தண்டனை விதிக்கப்பட்டது.

ஒப்பந்தம்

அமெரிக்க கூட்டணிப் படைகளின் உச்ச தளபதியுமான ஜெனரல் டக்ளஸ் மாக்ஆர்தர், ஐக்கிய நாடுகள் சபையில் ஃப்ளீட் அட்முடன் கையெழுத்திட்டார்.

செஸ்டர் நிமிட்ஸ் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, சீனா உள்ளிட்ட பிற நட்பு நாடுகளின் அமெரிக்க பிரதிநிதிகளுக்காக கையெழுத்திட்டார். இந்த விழா அரை மணி நேரம் நடந்தது.

பின்னர் என்ன நடந்தது?

ஜப்பானின் சரணடைதலுக்கான ஒப்பந்தத்தில், நாட்டில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும், போர்க் கைதிகளையும் மற்றவர்களையும் சிறைபிடிக்க வேண்டும் மற்றும் பிற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

எனினும் ஜப்பானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ஏழு ஆண்டுகள் நீடித்தது. இது 1954 சான்பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இது ஜப்பான் சர்வதேச சமூகத்திற்கு திரும்ப வழிகோலியது. தற்போது, ஜப்பான் பாதுகாப்பு மற்றும் பிற பகுதிகளில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது.

இதற்கிடையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக களமிறங்கியது. ஆரம்பக் கட்டத்தில் இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு போர் இழப்பீடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன.

எனினும் ஆசிய நாடுகளுடன் நிலவிய முந்தைய சச்சரவை நீக்கி, இயல்பு நிலையை மீட்டெடுக்க இரண்டு தசாப்தங்கள் ஆகின.

இந்நிலையில் 1965இல் தென் கொரியாவுடனும், 1972இல் சீனாவுடனும் இரு தரப்பு உறவுகள் மீண்டும் ஏற்பட்டன.

எனினும் போர்க் கால வரலாறுகள் குறித்த சர்ச்சைகள் ஜப்பானின் அண்டை நாடுகளுடனான உறவை தற்போதும் பாதித்துவருகின்றன. அதன் நீட்சியாக இன்று வரை ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. வடகொரியாவுடனும் இரு தரப்பு ராஜாங்க உறவுகள் ஏற்படவில்லை.

இதையும் படிங்க:ஷின்ஷோ அபே காலத்தில் இந்திய - ஜப்பான் உறவு

ABOUT THE AUTHOR

...view details