வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தீவிர உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அமெரிக்கா தகவல் வெளியிட்டது. இது கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த சில நாட்களாகவே அதிபர் கிம்மை பொது நிகழ்வுகளில் பார்க்க முடியவில்லை. வட கொரியாவை உருவாக்கியவரும், கிம்மின் தாத்தாவுமான கிம் சுங் பிறந்த நாள் விழா ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில்கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. 2011ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றபின் ஒருமுறை கூட கிம் சுங் பிறந்தநாள் விழாவை, உன் தவறவிட்டதில்லை.
இதையடுத்து, உடல்நலக் கோளாறு காரணமாக கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்க ராணுவ உயர் அலுவலர் ஒருவர் இது தொடர்பாக முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், உடல்நிலை சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சூழலிலும், வடகொரிய ராணுவக் கட்டுப்பாடு முழுவதும் அதிபர் கிம் வசம்தான் உள்ளது எனவும், அரசின்பிடி முழுவதையும் அதிபர் கிம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஈரான் பீரங்கிக் கப்பல்களை சுட்டு வீழ்த்துங்கள் - அச்சுறுத்தும் டொனால்ட் ட்ரம்ப்