தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கனடாவில் குழந்தைகளிடம் தீவிரமாகப் பரவும் கரோனா

கனடாவில் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது.

Covid cases
Covid cases

By

Published : Nov 6, 2021, 5:04 PM IST

கனடாவில் தினசரி கரோனா பாதிப்பில் 20 விழுக்காடு பாதிப்பு 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஏற்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் சுமார் 43 லட்சம் பேர் 12 வயதுக்கும் குறைவானவர்கள் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளை விட குழந்தைகளின் மக்கள்தொகை கனடாவில் அதிகம் காணப்படுவதால் குழந்தைகளிடம் இந்த பரவல் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் விதமாக பைசர் நிறுவனத்திடம் 29 லட்சம் தடுப்பூசி டோஸ்களை கனடா அரசு ஆர்டர் செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் கனடாவில் பதிவாகிவருகின்றன.

நான்காம் அலை உச்சம் பெறும் பட்சத்தில் தினசரி பாதிப்பு நான்காயிரத்துக்கும் மேல் ஏற்படும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.கனடாவில் இதுவரை மொத்தம் 17 லட்சத்து 26 ஆயிரத்து 671 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 29 ஆயிரத்து 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு

ABOUT THE AUTHOR

...view details