தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியர்களின் வாக்கு ட்ரம்பை வெற்றிபெற வைக்கும் - அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன்! - ஜோ பிடன்

வாஷிங்டன்: இந்திய-அமெரிக்கர்கள் நிச்சயம் ட்ரம்ப்பிற்குதான் வாக்களிப்பார்கள் என்றும், இதன் மூலம் அதிபர் தேர்தில் ட்ரம்ப் எளிதில் வெற்றி பெறுவார் என்றும், அவரது மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Aug 3, 2020, 5:56 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக, இத்தேர்தல் முழுவதும் தாபல் மூலம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், 74 வயதான அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் 77 வயதான முன்னாள் அதிபர் ஜோ பிடனும் களமிறங்கவுள்ளனர்.

அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 6 முதல் 8 விழுக்காடு வரை ட்ரம்பைவிட ஜோ பிடன் முன்னணியில் உள்ளார். கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதாக, வாக்காளர்கள் கருதுவதால் பிடனுக்கான ஆதரவு பெருகியுள்ளது வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், "கடும் போட்டி நிலவும் மாகாணங்கள், 2020ஆம் ஆண்டு ட்ரம்ப்பின் வெற்றியை உறுதி செய்யும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இணையதளம் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், "கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் இந்தியர்களும் அமெரிக்கர்கள் சரி சமமாக உள்ளனர்.

இங்குள்ள இந்தியா-அமெரிக்கர்களின் வாக்குகள் பொதுவாக ஜனநாயக கட்சிக்குதான் செல்லும். ஆனால், இம்முறை இவர்கள் ட்ரம்ப்பிற்கே ஆதரவளிப்பார்கள். இதன் மூலம் ட்ரம்ப்பின் வெற்றி உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அதிபர் ட்ரம்ப்பின் பரப்புரைகளை முன்நின்று நடத்தும் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை - ட்ரம்ப் தகவல்

ABOUT THE AUTHOR

...view details