தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மழையில் உற்சாகமாக நடனமாடிய கமலா ஹாரிஸ்! - கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பரப்புரையின்போது ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

By

Published : Oct 21, 2020, 10:57 AM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர். ஜனநாயக கட்சியின் துணை வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பரப்புரை சூடிபிடித்துள்ளது. இதற்கிடையே, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, கமலா ஹாரில் மழையில் நடமாடிய பார்ப்போரை கவர்ந்துள்ளது. ஒரு கையில் குடையை வைத்துக் கொண்டு ரேப் பாடலுக்கு அவர் நடனமாடியதை அவரின் உறவினர் மீனா ஹாரிஸ், வீடியோவாக பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

சில மணி நேரத்திலேயே, இதற்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்தன. கடும் மழையிலும் குவிந்த மக்களிடையே உரையாற்றிய கமலா, "நாம் வாக்களித்தால்தான், நாம் வெற்றி பெறமுடியும்" என்றார். தான் நடமாடிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அவர், "மழைக்கும் வெயிலுக்கும் ஜனநாயகம் காத்திருக்காது" என பதிவிட்டார்.

துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பின பெண் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்.

இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபர் தேர்தல்: ரஷ்ய உளவாளிகள் செய்த சதிவேலை அம்பலம்

ABOUT THE AUTHOR

...view details