அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார். மேலுப், துணை அதிபர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான கமலா ஹாரிஸை வேட்பாளராக ஜோ பிடன் அறிவித்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஜோ பிடன் படையில் மற்றொரு இந்திய-அமெரிக்கர்...! கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளராக நியமனம்! - கமலா ஹாரிஸின் பத்திரிகை செயலாளராக சப்ரினா சிங் நியமனம்
வாஷிங்டன்: செனட்டர் கமலா ஹாரிஸ் தனது துணை அதிபர் தேர்தல் பரப்புரைக்கான செய்தித் தொடர்பாளராக இந்திய அமெரிக்கரான சப்ரினா சிங்கை நியமித்துள்ளார்.
இந்நிலையில், செனட்டர் கமலா ஹாரிஸ் தனது துணை அதிபர் தேர்தல் பரப்புரைக்கான செய்தித் செயலாளராக இந்திய அமெரிக்கரான சப்ரினா சிங்கை நியமித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக இரண்டு அதிபர் வேட்பாளர்களின் செய்தித் தொடர்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சப்ரினா சிங் கூறுகையில், "கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளராக இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நவம்பர் மாதத்தில் வெற்றியடைந்து வேலையில் ஈடுபடும் வரை காத்திருக்க முடியாது" என உற்சாகத்துடன் தெரிவித்தார்.